நண்பர்களே !மாதம் 9ஆயிரம் சம்பாதிக்கலாம் ஈஸியா

Thursday, February 2, 2012

தமிழர்களின் உரிமைகள் ம.தி.மு.க.வினால் மீட்கப்படும்: நாஞ்சில் சம்பத் பேச்சு

குத்தாலம், பிப்.2-
குத்தாலம் அருகே பழையகூடலூரில் ம.தி.மு.க. கொடியேற்று விழா நடந்தது. விழாவிற்கு நாகை மாவட்ட செயலாளர் குத்தாலம் ஏ.எஸ். மோகன் தலைமை தாங்கினார். குத்தாலம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சுரேஷ், ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் கரிகாலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மேற்கு ஒன்றியச் செயலாளர் வாசு வரவேற்று பேசினார்.
ம.தி.மு.க. கொள்கை விளக்க அணி செயலாளர் நாஞ்சில் சம்பத் கலந்து கொண்டு, கட்சி கொடியேற்றி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழர்களின் உரிமைகள் தொடர்ந்து பறிக்கப்பட்டு வருகின்றன. இந்தியாவின் மொழி இந்தி, இறை மொழி சமஸ்கிருதம், இசை மொழி கன்னடம், தெலுங்கு என்று உருவாக்கப்பட்டு தொண்மையான தமிழ் மொழியின் உரிமைகள் பறிக்கப்பட்டு விட்டன.
தமிழர்களின் நிலப்பரப்பான திருப்பதி, காளகஸ்தி, திருவனந்தபுரம், தேவிக்குளம், பீர்மேடு என்று பல்வேறு பகுதிகள் நம்மிடம் இருந்து பறிக்கப்பட்டு விட்டன. இதனால் தமிழர்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர்.இதனை மீட்க வேண்டும். தமிழ் மொழியின் மீட்சிக்கு மட்டுமல்லாமல் தமிழர்களின் நிலத்தையும் மீட்க விரைவில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் போராட்டம் நடத்த உள்ளார். கண்டிப்பாக தமிழர்களின் உரிமைகள் ம.தி.மு.க.வினால் மீட்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக கட்சி துணை பொதுச் செயலாளர் துரை. பாலகிருஷ்ணன் கல்வெட்டை திறந்து வைத்தார். விழாவில் மாநில கொள்ளை விளக்க அணி துணை செயலாளர் என்.எஸ். அழகிரி, முன்னாள் ஒன்றிய பெருந் தலைவர் தங்கையன், மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் கோமல் கிட்டு, ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் மணிகண்டன், கிளை நிர்வாகிகள் சின்ன துரை, குமரவேல், கோவிந்தராஜ், சாமிநாதன், தர்மராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் ஊராட்சி செயலாளர் கிருபானந்தம் நன்றி கூறினார்.இதேபோல் மயிலாடுதுறையில் நடந்த மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் நாஞ்சில் சம்பத் கலந்து கொண்டு பேசினார்.
கூட்டத்திற்கு சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். இதில் நகர, மாவட்ட பொறுப்பாளர்கள் முன்னிலை வகித்தனர். மார்க் கெட் கணேசன் வரவேற்று பேசினார். அரசியல் ஆலோசனைக்குழு உறுப்பி னர் மகாலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர். முடிவில் நகரச் செயலாளர் பன்னீர்செல்வம் நன்றி கூறினார்.

1 comment:

  1. ஒட்டுமொத்த தமிழினத்தையே கொச்சைபடுத்தும் தமிழன்.

    இந்த thamilnattu.com நிரூபன், அவர் இடுகையில் சொல்கிறார், ஆபாச வெறி கொண்டலையும் தமிழர்கள்!
    ஒட்டுமொத்த தமிழர்களணைவரும் ஆபாச வெறியர்களாம.
    படித்துத்தான் பாருங்களேன்

    http://www.thamilnattu.com/2012/07/blog-post_7.html
    ஆபாச வெறி கொண்டலையும் தமிழர்கள்!
    அன்பிற்குரிய சொந்தங்களே.. எல்லோரும் நல்லா இருக்கீங்களா?
    உங்க எல்லோருக்கும் அட்வைசு செஞ்சு எழுதுமளவிற்கு நான் ஒன்னும் அப்பாடக்கர் இல்லைங்க. என் மனசில பட்ட சில விசயங்களை உங்க கூட பகிர்ந்துக்கலாம் எனும் நோக்கில் இந்தப் பதிவினை எழுதுகின்றேன். வாங்க பதிவுக்கு போகலாம். எம் தமிழர்களிற்கு என சில தனித்துவமான இயல்புகள் உள்ளன. அவ் இயல்புகள் உலகினில் வாழும் ஏனைய இன மக்களுக்கு இல்லாத தனித்துவ இயல்புகள் என்றும் கூட சொல்லிக்கலாமுங்க.

    தமிழர்கள் பூர்வீகமாக அதிகளவில் செறிந்து வாழும் நம்ம இலங்கையும், தமிழ் நாடும் ஏன் இன்னமும் உலகின் ஏனைய நாடுகளோடு ஒப்பிடும் போது பெரும் வளர்ச்சியடையவில்லை அப்படீன்னு யாராச்சும் என்னைக்காச்சும் நெனைச்சு பார்த்திருக்கீங்களா? வாருங்க..உட்கார்ந்து பேசுவோம். நான் ரூம் போட்டு யோசித்து பார்த்தேனுங்க. ஒரு சில உண்மைகள் என் மனதில் தென்பட்டது. தமிழர்களிடம் பாலியல் வெறித்தனமும், மூட நம்பிக்கைகளும், முட்டாள் தனமான அரசியல் வெறியும் இருக்கும் வரை தமிழினம் இந்த ஜென்மம் அல்ல, இன்னும் இருபது ஜென்மம் எடுத்தாலும் உருப்படாதுங்க.

    "மறைக்கின்ற பொருளுக்குத் தான் மதிப்பதிகம் என்பார்கள்” இது கவிஞர் வைரமுத்துவின் வரி. இந்த வரியைப் படிச்சனும் அச்சச்சோ நிரூபன் எல்லா தமிழர்களையும் கலாச்சாரத்தை பத்தி கவலைப்படாது மறைக்காம வீதி உலா வாங்கன்னு சொல்றாருன்னு தப்பா நெனைச்சுப்புடாதீங்க. வெள்ளைக்காரனைப் பொறுத்த வரை ஒவ்வொரு மனித உணர்வுகளுக்கும் தனியான நேரம், தனியான நாள், தனித்துவமான அம்சங்கள் எனப் பல உண்டு. நம்ம ஊரில வயசுக்கு வந்ததும் பொண்ணுங்க கூட நாம பேசவே முடியாது. பொண்ணுங்களும் நம்ம கூட பேசமாட்டாங்க.

    நம்மாளுங்க கலாச்சரத்தின் பெயரால் செய்யும் மிக மிக இழிவான மூட நம்பிக்கை ஆணையும் பெண்ணையும் நண்பர்கள் போல பழக அனுமதிக்காது ஓர் ஆணுடன் பெண் பேசுவதோ அல்லது பெண்ணுடன் ஆண் பேசுவதோ தவறு என்று கூறி காமக் கண் கொண்டு ஆணும் பெண்ணும் பேசினால் காமத்துடன் நோக்குகின்றது எம் சமூகம். ஆண்களும் பெண்களும் சின்ன வயசு முதல் ஒன்னாக கல்வி கற்கும் காலத்தில நம்ம சமூகம் எதிர்த்தாப்பில இருக்கிற ஸ்கூல் பொண்ணை எதிர்ப்பாலின ஆளாகச் சித்தரிக்கின்றதேயன்றி அந்தப் பெண்ணும் சக மனுசி - சக தோழி எனும் உண்மையினை உரைத்து சகஜமாக ஆணையும் பெண்ணையும் பழக அனுமதி வழங்க மறுக்கிறது எம் சமூகம்.

    இங்கே சகஜமாக என்றோர் வார்த்தையினை பார்த்ததும் நீங்க விபரீதமான அர்த்தத்தில் இரட்டை அர்த்தத்துடன் நீங்கள் நோக்கினால் நான் அதற்கு பொறுப்பாளி கிடையாது. ஆணும் பெண்ணும் சகஜமாகப் பழகுறாங்க என்று சொன்னாலே அட.. அவர்கள் தம் பாலியல் தேவையினை நிறைவேற்ற தான் பழகுறாங்க என்று பேசிக்கிறது நம்ம சமூகம். சின்ன வயசில இருந்து எதிர்ப்பாலாரை இவர் நீ திருமணம் செய்யப் போகும் எதிர்ப் பால் வர்க்கம் எனக் கூறி கூறியே ஒரு மாணவனை காமுகன் போல எதிர்த்தாப்பில இருக்கும் பெண்ணை பார்த்து சிந்திக்க வைக்கிறது எம் சமூகம்.

    ஆணைப் பெண் சக மனுசனாகவும், பெண்ணை ஆண் சக மனித ஜென்மமாகவும் உணரும் காலம் என்னைக்கு நம்ம நாடுகளில் வருதோ அன்னைக்கு அலுவலகங்களில் நடக்கும் பாலியல் கொடுமைகள், பாலியல் வல்லுறவுகள், ஆபாச வெறி கொண்டலையும் தமிழர்களின் உணர்வுகள் யாவும் ஒடுங்கி தமிழன் நாட்டை முன்னேற்றுவது பத்தி சிந்திக்க ஆரம்பிப்பானுங்க. இந்த உணர்வுகளையெல்லாம் எப்படி உதறித் தள்ளுவது என்று அடுத்த பதிவில் சொல்றேனுங்க.

    ReplyDelete