நண்பர்களே !மாதம் 9ஆயிரம் சம்பாதிக்கலாம் ஈஸியா

Saturday, December 17, 2011

சீர்காழியில் இனிய உதயம் Azhwar Constuctions

சீர்காழியில் இனிதாக உதயமாகி இருக்கிறது Azhwar constuctions   .
இதன் திறப்பு விழா {14 - 12 -2011 ------புதன் கிழமை }அன்று மிக பிரம்மாண்டமாக நடைப்பெற்றது .
அலுவகத்தை திரு .EX .MLA  பன்னீர்செல்வம் அவர்கள் திறந்து வைத்து குத்து விளக்கு ஏற்றினர் .
நிகழ்ச்சியில் திரு .சீனுவாசன் தம்பு ,திரு .சுரேஷ் தம்பு ,திரு .மோகன் {தொழிலதிபர் -சென்னை },
திரு .முரளி தம்பு ,திரு .தமிழ்வாசகன் ,திரு.நரசிம்மன் ...மற்றும் பலர் வருகை தந்து விழாவை சிறப்பித்தனர் .
 Azhwar constuctions -யின் நிர்வாக இயக்குனர் {M .D } திரு .Er.வீரா கூறுகையில் :
எங்கள் நிறுவனம்{Azhwar constuctions } சீர்காழியில் இனிதாக உதயமாகி இருக்கிறது.மக்கள் அனைவரும் எங்களுக்கு ஆதரவு தர வேண்டும் .
உங்கள் கனவு இல்லைத்தை மிக அழகாகவும் ,மிக குறைந்த விலையில் கட்டி கொடுக்கிறோம் .கட்டுமான துறையின் புதிய தொழில் நுட்பங்களை கொண்டு உங்கள் வீடு கட்டிதருகிறோம் .
{எடுத்துகாட்டாக}

 
செங்கல்லுக்கு மாற்றாக புதிய தொழில்நுட்பம்
ஃப்ளை ஆஷ் பிரிக்ஸ்
செங்கல்லுக்கு மாற்றாக புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த தொடங்கியதன் முதல்படி ஹாலோ பிளாக் என்றால், அதன் அடுத்த கட்டமாக வந்த தொழில்நுட்பம்தான் ஃப்ளை ஆஷ் பிரிக்ஸ்.

புதிய தொழில்நுட்பத்தில் நவீனமான முறையில் தயாரிக்கப்படுவதாலும், சுற்றுச்சூழலுக்கு உகந்த நண்பனாக இருப்பதாலும், கட்டுமானத்துறையில் இப்போது ஃப்ளை ஆஷ் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. தயாரிப்புச் செலவு அதிகம் என்றாலும், செங்கல்லின் தேவை தவிர்க்க முடியாதது என்பதால் இந்தத் தொழிலில் துணிந்து இறங்கலாம். அனல் மின் நிலையத்திலிருந்து வெளியேற்றப்படும் நிலக்கரி சாம்பல்தான் முக்கிய மூலப் பொருள். சிமென்ட் செங்கல் , சிமென்ட் கல் எனவும் அழைக்கப்படுகிற இந்த ஃப்ளை ஆஷ் பிரிக்ஸ், செங்கல்லை விடவும் நீடித்து உழைக்கும். மற்றும் சீக்கிரத்தில் உடையாது. இந்த தன்மைகளால் கட்டட வேலைகளில் பெரிதும் நம்பகத் தன்மையை அடைந்து விட்டது. ஆண்டுக்கு 90 மில்லியன் டன் ஃப்ளை ஆஷ் இந்தியாவின் அனல் மின் நிலையங்களிலிருந்து கிடைக்கிறது. வரும் ஆண்டுகளில் இன்னும் அதிகளவில் இந்த நிலக்கரி சாம்பல் கிடைக்கும் எனவும் தெரிவிக்கின்றனர். பொது வாக நமது நாட்டில் மின்சாரத் தேவையை 70% அளவுக்கு அனல்மின் நிலையங்களே பூர்த்தி செய்வதால், இந்த கற்கள் தயாரிப்பதற்கான மூலப் பொருளுக்கு தட்டுப்பாடு வராது என்று நம்பலாம். குறிப்பாக தமிழ்நாட்டில் நெய்வேலி, மேட்டூர், தூத்துக்குடி, எண்ணூர், மற்றும் வடசென்னை அனல்மின் நிலையங்களிலிருந்து எளிதாகக் கிடைத்து விடுவதால் இதன் அருகில் இருக்கும் ஊர்களில் இருப்பவர்களுக்கு இந்த தொழில் செய்வது கூடுதல் வாய்ப்பாகக் கருதப்படுகிறது.


பயன்பாடுகள்


இந்த ஃப்ளை ஆஷ் கற்களைக் கொண்டு கட்டப்படும் கட்டடங்கள் நல்ல உறுதியாக இருப்பது முக்கியமான விஷயம். இதன் வடிவம் மற்றும் அளவு கட்டட வேலைகளை சுலபமாக்குகிறது. தண்ணீர் கசிவின்மை, வலிமை, நெகிழ்வுத்தன்மை போன்ற கான்கிரீட்டை உறுதிப்படுத்தும் பண்புகள் இந்த கற்களில் இருப்பதால் கட்டட பொறியாளர்களின் முதன்மை தேர்வாக இது இருக்கிறது. தயாரிக்கும் முறை நிலக்கரி சாம்பல் 70%, மணல் 15%, சுண்ணாம்புகல் 10% மற்றும் ஜிப்சம் 5% ஆகிய மூலப்பொருட்களை சரியான விகிதத்தில் சேர்க்க வேண்டும். 8-10% என்கிற விகிதத்தில் தண்ணீர் சேர்த்து இந்த கலவையை ஹைட்ராலிக் இயந்திரத்தில் கொட்டி இயந்திரத்தை இயக்கினால் ஃப்ளை ஆஷ் செங்கல் கிடைத்துவிடும். ஹாலோ பிளாக் தயாரிப்பு முறைதான் இதற்கும் என்றாலும், இதனை 48 மணி நேரத்திற்கு வெயிலில் காய வைக்க வேண்டும். அதன்பிறகு இந்த கற்கள் மீது தண்ணீர் ஊற்ற வேண்டும். தண்ணீர் ஊற்றும்போதுதான் கற்கள் கூடுதல் அடர்த்தியாகும்.

இது போன்று பல புதிய தொழில் நுட்பங்களை கொண்டு உங்கள் இல்லத்தை சிறப்பாக அமைத்து தருகிறோம் .
 வாழ்த்துங்கள் வளர்கிறோம் ,வாய்பளியுங்கள் உங்கள இல்லைத்தை கட்ட .
தொடர்புக்கு :


















சீர்காழியில் இருந்து சபரிமலைக்கு பாதயாத்திரை

பதினாறு பேர் கொண்ட ஒரு குழுவினர்  சீர்காழி  இரட்டை தெரு காளியம்மன் கோவில் இருந்து சபரிமலைக்கு பாதயாத்திரையாக
{14 -12 -2011 }அன்று  புறப்பட்டனர்
பதினாறு பேர் கொண்ட ஒரு குழுவினர்  சீர்காழி  இரட்டை தெரு காளியம்மன் கோவில் இருந்து சபரிமலைக்கு பாதயாத்திரையாக
{14 -12 -2011 }அன்று  புறப்பட்டனர்








Tuesday, November 22, 2011

சீர்காழி கைகாட்டியில் விபத்து வீடியோ


மயிலாடுதுறையில்  இருந்து வந்த(22-11-2011} relince  பஸ் ,and நாகபட்டினத்தில் இருந்து வந்த காரும் சாலையை  கடக்கும் போது விபத்து நிகழ்ந்தது

Sunday, September 11, 2011

ஒரு நாள் பெய்த மழையில் சீர்காழி புதிய பேருந்து நிலையம் தண்ணீரில் மிதக்கிறது

11-9-2011 அன்று பெய்த மழையில் சீர்காழி புதிய பேருந்து நிலையம் தண்ணீரில்  மிதக்கும் காட்சி
                                                மிதக்கும் காட்சி  வீடியோ