நாகை, பிப் 12-
நாகை அருகே உள்ள திட்டசேரியை சேர்ந்தவர் முருகையன். அவரது மகள் மாதவி(வயது 19). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த வாலிபர் பிரபு என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் காதல் வயப்பட்டனர்.காதல் வானில் சிறகடித்து பறந்த அவர்கள் அடிக்கடி உல்லாசம் அனுபவித்தனர்.
இதனால் மாதவி 3 மாதம் கர்ப்பம் ஆனார். அதிர்ச்சி அடைந்த அவர் தனது காதலனிடம் திருமணம் செய்யுமாறு கூறினார். ஆனால் பிரபு மறுத்து விட்டார். பதறி போன மாதவி இதுகுறித்து நாகை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
புகார் மனுவில் என்னை காதலித்து கர்ப்பமாக்கிய பிரபு, உடந்தையாக இருந்த அவரது தாய் தேவிகா, அக்காள் பிரவீணா ஆகியோர் மீது நடிவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து 3 பேரையும் தேடி வருகிறார்கள்.
No comments:
Post a Comment