தரங்கம்பாடி,பிப்.7-
செம்பனார்கோவிலில் தோழி தாக்கியதில் காயமடைந்த பிளஸ்-2 மாணவி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகி றார்கள். நாகை மாவட்டம் செம்பனார் கோவிலை சேர்ந்தவர் வெற்றிவேல். இவரது மகள் மூகாம்பிகை (வயது15).
இவர் அங்குள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். அதே வகுப்பில் படிப்பவர் நிவேதிதா. இருவரும் தோழிகள். கணக்கு பாடத்தில் மூகாம்பிகை குறைவான மார்க் எடுத்ததால் நிவேதிதா அவரை தலையில் குட்டி உள்ளார். இதனால் அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டது. விளையாட்டாக ஆரம்பித்த சண்டை கைகலப்பாக மாறியது.
இதில் மூகாம்பிக்கை கழுத்தில் காயம் ஏற்பட்டது. மயிலாடுதுறையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சை பெற்ற மூகாம்பிகை அதன் பிறகு மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப் பட்டார்.
endi adichikkiringa - adi venumnu kettaa...naanga irukkomla.
ReplyDelete