நாகை, பிப். 5-
நாகையில் கடற் சீற்றத்தால் மீனவர்கள் இன்று கடலுக்கு செல்லவில்லை. நாகை மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதியில் கடந்த 2 நாட்களாக கடல் சீற்றம் அதிகம் காணப்படுகிறது.
காற்றின் வேகம் அதிகரித்து இருப்பதால் கடலில் எழும்பும் ராட்சத அலைகள் கரையை முட்டி மோதுகின்றன. தொடர்ந்து காற்று வேகமாக வீசியதால் இன்று மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க செல்லவில்லை. சுமார் 1000-க்கும் மேற்பட்ட படகுகள் கடலுக்குள் மீன் பிடிக்க செல்லவில்லை.
இதுகுறித்து மீனவர்கள் கூறுகையில் நடுக்கடலில் மீன்பிடிக்கும் போது காற்றின் வேகம் நேரம் ஆக ஆக அதிகரித்து கொண்டே இருந்தது. இதனால் எங்களால் மீன்பிடிக்க முடியவில்லை என்றனர்.
No comments:
Post a Comment