சீர்காழி, மார்ச். 4-
சீர்காழி அருகே நடத்தையில் சந்தேகத்தால் மனைவியை வெட்டி கொன்ற கணவன் கைது செய்யப்பட்டார். நாகை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள தாண்டவன்குளம் புதுநகரை சேர்ந்தவர் பாண்டியன். (வயது 50). அவரது மனைவி வெள்ளையம்மாள். (45). இவருக்கு ஏற்கனவே செல்லையன் என்பவருடன் திருமணம் நடந்து உள்ளது.
பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக அவரை விட்டு பிரிந்து பாண்டியனை திருமணம் செய்தார். கடந்த சில நாட்களாக பாண்டியன் தனது மனைவி வெள்ளையம்மாள் நடத்தையில் அடிக்கடி சந்தேகப்பட்டார். இதனால் குடும்பத்தில் பிரச்சினை வெடித்தது. அக்கம் பக்கம் உள்ளவர்கள் சமரசம் செய்தனர். நேற்று கணவன்-மனைவி இருவரும் வீட்டில் தூங்கினர்.
நள்ளிரவு சமயம் வெள்ளையம்மாள் திடீர் என மாயமானார். அப்போது பாண்டியன் கண் விழித்து பார்த்த போது மனைவி மாயமானது கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே எழுந்து தேட ஆரம்பித்தார். அப்போது வெள்ளையம்மாள் அங்கு உள்ள மறைவான இடத்தில் நின்று கொண்டு இருந்தார். கோபத்தின் உச்சிக்கு சென்ற பாண்டியன் அரிவாளால் சரமாரியாக வெள்ளையம்மாளை வெட்டினார்.
இதில் அவர் ரத்த வெள்ளத்தில் பிணமானார். அதனை பார்த்ததும் பாண்டியன் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இன்று காலை வெள்ளையம்மாள் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதை பார்த்து அக்கம்பக்கம் உள்ளவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
No comments:
Post a Comment