மயிலாடுதுறை பகுதி இளையனூர் ஊராட்சி வடகரை கிராமம் வடக்கு தெருவை சேர்ந்தவர் விவசாயி மூர்த்தி. இவருக்கு சொந்தமான ஆடு ஒன்று நேற்று நள்ளிரவு குட்டி ஈன்றது. அந்த ஆடு குட்டி போட முடியாமல் அலறியவாறு திணறிக்கொண்டு இருந்தது.
இதை பார்த்த கிராம பெண்கள் 3 பேர் வெகு நேரம் போராடி பிரசவம் பார்த்தனர். பின்னர் ஆடு குட்டியை ஈன்றது. அந்த குட்டி வழக்கமான ஆட்டு குட்டிப்போல் இல்லாமல் விசித்திரமாக மனித உருவ அமைப்புடன் இருந்தது.
மனித உருவம் போல் உடல்வாகும், 2 கைகள், 2 கால்கள் இருந்தது. மேலும் முகம் மனித முகம் போன்றே அமைந்து இருந்தது. குறிப்பாக ஒரு குழந்தையை போன்ற அந்த ஆட்டுக்குட்டியின் விசித்திர தோற்றத்தை கண்டு மூர்த்தி மற்றும் கிராம மக்கள் பார்த்து ஆச்சரியம் அடைந்தனர்.
சில நிமிடங்களில் அந்த குட்டி இறந்து விட்டது. இந்த அதிசய ஆட்டுக்குட்டி பிறந்த தகவல் அறிந்த சுற்றுப்புற பகுதி மக்கள் ஏராளமானோர் ஆர்வமாய் வந்து பார்த்து ஆச்சரியமடைந்தனர். இந்த அதிசய ஆட்டுக்குட்டியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
No comments:
Post a Comment