சீர்காழி, மே.13-
சீர்காழி
அருகே உள்ள தென்பாவி எம்.கே.கே. நகரில் வசித்து வருபவர் கோவிந்தராஜ்.
காண்டிராக்டர். குடிநீர் வடிகால் வாரிய பணிகளை காண்டிராக்டு எடுத்து நடத்தி
வருகிறார். இவர் நேற்று காலை வீட்டை பூட்டி விட்டு தனது காரில் மனைவி
வசுமதி, தாய் பாஞ்சாலி, அண்ணன் ராமலிங்கம் ஆகியோருடன் வேளாங்கண்ணி
கோவிலுக்கு சென்றார்.
இரவு 9 மணியளவில் வீடு
திரும்பினார்கள். அப்போது வீட்டின் முன் பக்க கதவு திறந்து கிடந்தது. உள்ளே
சென்று பார்த்த போது கதவு உடைக்கப்பட்டு அங்கு வைக்கப்பட்டிருந்த 4
பீராவும் திறந்து இருந்தது. பீரோவில் இருந்த பொருட்கள் சிதறி காணப்பட்டது.
அதில் வைக்கப்பட்டிருந்த 10 பவுன் நகை, ரூ. 40 ஆயிரம் ரொக்கப்பணம் ஆகியவை
கொள்ளை போய் இருந்தது.
இவற்றின் மொத்த மதிப்பு ரூ. 3
லட்சம் ஆகும். பட்டப்பகலில் இக்கொள்ளை சம்பவம் நடைபெற்றுள்ளது.
காண்டிராக்டர் கோவிந்த ராஜ் கோவிலுக்கு செல்வதை நோட்டமிட்ட கொள்ளைக்
கும்பல் வீட்டின் கதவை உடைத்து கை வரிசையை காட்டி இருக்கிறது. இது குறித்து
சீர்காழி போலீசில் புகார் செய்யப்பட்டது. தகவல் கிடைத்ததும் சீர்காழி
டி.எஸ்.பி. நவநீத கிருஷ்ணன், இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார்
அங்கு விரைந்து சென்றனர்.
கைரேகை நிபுணர்கள்
வரவழைக்கப்பட்டு கொள்ளையர்களின் ரேகைகளை பதிவு செய்தனர். கொள்ளை யர்களை
பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் தீவிர தேடுதல் வேட்டையில்
ஈடுபட்டு உள்ளனர். இக்கொள்ளை சம்பவம் சீர்காழி பகுதியில் பரபரப்பை
ஏற்படுத்தி உள்ளது.
No comments:
Post a Comment