Tuesday, March 29, 2011
Tuesday, March 22, 2011
Friday, March 4, 2011
டேனிஷ் கோட்டை அகழ்வைப்பகம் -தரங்கம்பாடி [Danish Ford Museum -Tranquebar]
பொறையாறு: தமிழகத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களில் ஒன்றாகவும், நாகை மாவட்டத்தின் குறிப்பிடத்தக்க சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகவும் கருதப்படும் தரங்கம்பாடியை, சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் மேம்படுத்தும் பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தரங்கம்பாடி என்றாலே நினைவுக்கு வருவது டேனிஷ் கோட்டைதான். கி.பி. 1620-ம் ஆண்டு கட்டப்பட்ட இந்தக் கோட்டை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. இக் கோட்டையினுள் தொல்லியல் துறை அருங்காட்சியகம் ஒன்றும் உள்ளது. கி.பி. 1305-ம் ஆண்டு மாறவர்ம குலசேகர பாண்டியனால் கட்டப்பட்ட பிரசித்தி பெற்ற மாசிலாமணிநாதர் கோயில். கி.பி. 1706-ம் ஆண்டில் தரங்கம்பாடிக்கு வந்து தமிழுக்காக பல்வேறு தொண்டுகள் ஆற்றி, முதல் தமிழ் அச்சுக் கூடத்தை நிறுவிய ஜெர்மன் நாட்டின் சீகன் பால்குவின் நினைவுச் சின்னம், அவரது முழு உருவச் சிலை, சியோன் கிறிஸ்தவ ஆலயம், புதிய ஜெருசலேம் ஆலயம், 300 ஆண்டுகள் பழைமை வாய்ந்த மசூதி, ஆளுநர் மாளிகை என வரலாற்று ஆர்வலர்களையும், வெளிநாட்டவரையும் கவரக் கூடிய பல இடங்களையும் கொண்டது தரங்கம்பாடி. இதனால், இங்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.
கோட்டையின் நுழைவு வாயில்
கோட்டையின் நுழைவு வாயில்
Subscribe to:
Posts (Atom)