சீர்காழி, ஜன. 17-
சீர்காழி
அருகே உள்ள திருக்கருக்காவூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் ராதிகா (வயது 26,
பெயர் மாற்றப்பட்டுள்ளது). வாய் பேச முடியாதவர். நேற்று மாலை அப்பகுதியில்
உள்ள காட்டில் விறகு பொறுக்க ரேணுகா சென்றார். அப்போது அதே பகுதியை சேர்ந்த
வாலிபர்கள் வினோத் (26), பாலாஜி (27). வடகால் செந்தில் (25). ஆகிய 3
பேரும் மது குடித்து கொண்டு இருந்தனர்.
போதை
தலைக்கேறிய அந்த வாலிபர்கள் விறகு பொறுக்கி கொண்டு இருந்த ராதிகாவிடம்
சென்று தகராறு செய்தனர். பின்னர் அவரை பலவந்தமாக கையை பிடித்து இழுத்தனர்.
அவர்களின் பிடியில் இருந்து ராதிகா தப்ப முயன்றார். ஆனால் அந்த 3
வாலிபர்களும் ராதிகாவை குண்டுகட்டாக தூக்கி, மறைவான இடத்துக்கு சென்று
கற்பழிக்க முயன்றனர்.
வாய்பேச முடியாத பெண்
என்பதால், ராதிகா சத்தம் போட முடியாமல் அந்த வாலிபர்களை கைகளால்
தாக்கினார். அப்போது அந்த வழியாக சிலர் இதை பார்த்து ஓடிவந்தனர் அதற்குள்
அந்த போதை வாலிபர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
தலையில்
பலத்த காய மடைந்த ரேணுகாவை சிகிச்சைக்காக சீர்காழி அரசு ஆஸ்பத்திரிக்கு
அனுப்பி வைத்தனர்.இது குறித்து ராதிகாவின் தாய் பானுமதி சீர்காழி போலீசில்
புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் கணேசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை
நடத்தி வருகிறார். கற்பழிக்க முயன்ற 3 வாலிபர்களையும் போலீசார் தொடர்ந்து
தேடி வருகின்றனர்.