நண்பர்களே !மாதம் 9ஆயிரம் சம்பாதிக்கலாம் ஈஸியா

Thursday, August 25, 2011

வேளாங்கண்ணி கோவில் ஆண்டு பெருவிழா



நாகை மாவட்டம் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா கோவில் ஆண்டு பெருவிழா ஆகஸ்ட் 29ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி 10 நாட்கள் நடக்கிறது. இதற்காக பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது,'' என்று கோவில் அதிபர் மைக்கேல் அடிகளார் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது: நாகை மாவட்டம் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா கோவில் ஆண்டு பெருவிழா ஆகஸ்ட் 29ம் தேதி துவங்கி செப்டம்பர் எட்டாம் தேதி வரை நடக்கிறது. இதற்காக வேளாங்கண்ணியில் பக்தர்களின் தேவைக்கு 24 மணி நேரமும், குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்யபட்டுள்ளது. பத்து இடங்களில் புதிதாக கழிப்பிட வசதி செய்யப்பட்டுள்ளது. நடைபயணமாக வரும் பக்தர்கள் தங்க வசதியாக செபஸ்தியார், புனித தொன் போஸ்கோ, புனித தாமஸ் திருப்பயணியர்கள் தங்கும் இடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
திருட்டு மற்றும் குற்ற செயல்கள் தடுக்க ஆங்காகே சுழல் கேமராக்கள் மாவட்ட போலீஸ் சார்பில் பொறுத்தப்பட்டுள்ளது. விழாவுக்கு வரும் பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் குறைந்த விலையில் தரமான உணவு கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பஸ், கார் போன்ற வாகனங்களில் வரும் பக்தர்கள் வாகனங்களை நிறுத்த உப்புத்திடல், திருத்துறைப்பூண்டி ரோட்டில் உள்ள பெட்ரோல் பங்க் அருகில் புனித பீட்டர் பார்க்கிங் ஏரியா, நாகை சாலையில் புதுமை குளம் அருகில் புனித பவுல் பார்க்கிங் ஏரியா, புனித கிரிஸ்டோபர் ஏரியா மற்றும் ரயில்வே ஸ்டேஷன் பின்புறம் உள்ள புனித மரியன்னை கோவில் ஆகிய இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
கொடியேற்ற நாளான 29ம் தேதி அன்றும் தேர் பவனி நடக்கின்ற செப்டம்பர் ஏழாம் தேதி அன்றும் போக்குவரத்து நெரிசல் தவிர்க்க, வாகனங்கள் அனைத்தும் வேளாங்கண்ணி ஆர்ச் அருகே நிறுத்தப்படும். மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து இந்தாண்டு முதல் ஒரு வழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. பறவை சாலை வழியாக பஸ்களும், உச்சி மரத்தடி தெரு, பிள்ளையார் கோவில் தெரு, புனித கிரிஸ்டோபர் தெரு வழியாக கார், வேன், டூவீலர்கள் செல்லவும் வசதி செய்யப்பட்டுள்ளது.
நடை பயணமாக வரும் பக்தர்கள் ஆர்ச் வழியாக மாதா குளம் செல்லும் வழியில் சிறிது தூரம் சென்று புதிதாக கட்டப்பட்டு வரும் விடியற்காலை விண்மின் கோவிலுக்கு பின்புறமாக சென்று கோவிலை அடையாலம். இவ்வாறு மைக்கேல் அடிகளார் தெரிவித்தார். பேட்டியின் போது, பங்குதந்தை ஆரோக்கியதாஸ், பொருளாளர் டர்சிஸ்ராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.


Monday, August 22, 2011

சீர்காழியில் இரட்டைகொலை

சீர்காழி ஈசானிய தெருவை சேர்ந்தவர் கதீஜாபீவி (வயது 60). இவரது மகன் யூனுஸ். இவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இதனால் யூனுசின் மனைவி ராபியாபீவியும் அவரது மகன் நாசர் (26), மகள் சயீராபானு (19) ஆகியோர் கதீஜாபீவியுடன் வசித்து வந்தனர். சபீராபானு அந்த பகுதியில் உள்ள நடுநிலைப் பள்ளியில் ஆசிரியையாக வேலை செய்து வந்தார்.

நேற்று இரவு 7 மணியளவில் பக்கத்து வீட்டுக் காரருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் ராபியா பீவியும், நாசரும் அவரை அழைத்துக் கொண்டு ஆஸ்பத்திரிக்கு சென்றனர். அங்கு கையில் இருந்த பணம் மருந்து வாங்க போதுமானதாக இல்லாததால் நாசர் மட்டும் பணம் எடுப்பதற்காக வீட்டுக்கு வந்தார். வீடு பூட்டி இருந்ததால் பாட்டியையும், தங்கையும் அழைத்தார்.
ஆனால் பதில் வரவில்லை. கதவை தட்டியும் அவர்கள் கதவை திறக்காததால் ஜன்னல் வழியாக உள்ளே எட்டி பார்த்த நாசர் அதிர்ச்சி அடைந்தார்.

அங்கே கதீஜா பீவியும், சபீரா பானுவும் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தனர். இதுபற்றிய தகவல் பரவியதும் அக்கம் பக்கத்தவர்கள் அங்கு கூடினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சீர்காழி போலீஸ் இன்ஸ் பெக்டர் மகேந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் லட்சுமி பிரபா ஆகியோர் அங்கு சென்று விசாரணை நடத்தினார்கள். அப்போது கதீஜாபீவியும், சபீராபானுவும் கழுத்தை அறுத்து கொடூரமாக கொல்லப்பட்டது தெரிய வந்தது. வீட்டில் இருந்த பொருட்கள், பணம் திருடப்படவில்லை.

மேலும் வீட்டில் பின் பக்க கதவு வழியாக வந்து கொலையாளிகள் பாட்டி- பேத்தியை கொன்று உள்ளனர். கைரேகை நிபுனர்கள், மோப்பநாய் மூலமும் துப்பு துலக்கப்பட்டது. இந்த கொலைக்கான காரணம் பற்றி போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகிறார்கள்.

நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராமர், மயிலா டுதுறை டி.எஸ்.பி. மூவேந்தன் ஆகியோர் கொலை நடந்த வீட்டுக்கு சென்று விசாரணை நடத்தினார்கள். இந்த கொலை காரணமாக அந்த பகுதியில் பதட்டமான சூழ்நிலை நிலவுவதால் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

Tuesday, August 16, 2011

சீர்காழியில் நடிகர் டெல்லி கணேஷ்

சீர்காழியில் தமிழ்நாடு பிராமணர் சங்கத்திற்கு வருகை தந்தார் நடிகர் டெல்லி கணேஷ்.
அருகில் டாக்டர் .கோதண்டராமன் உடன் இருந்தார் 









Monday, August 15, 2011

சீர்காழி தாய் நகர்

சீர்காழி விளைந்திட சமுத்திரத்தில் அமைந்துள்ளது தாய் நகர்.