நண்பர்களே !மாதம் 9ஆயிரம் சம்பாதிக்கலாம் ஈஸியா

Thursday, April 21, 2011

தமிழிசை மூவர் மணிமண்டபத்தில் அமைச்சர் ஆய்வு -சீர்காழி







நாகை மாவட்டம் சீர்காழியில் பிறந்து வளர்ந்து உலகெங்கும் தமிழிசையை வளர்த்த தமிழிசை மூவர்களான முத்துதாண்டவர், 
அருணாச்சல கவிராயர் .மாரிமுத்தாப்பிள்ளை  ஆகியோரின் நினைவுகளை போற்றும் வகையில் தமிழக முதல்வர் கலைஞர்  ரூ.1 கோடியே 51 இலட்சம் செலவில் சீர்காழி தாலுக்க அருகில் மணிமண்டபம்  கட்ட உத்தரவிட்டார் .அதன்படி மணிமண்டபம் கட்டும் பணி கடந்த 8 மாதமாக நடந்து வருகிறது .இந்த பணியை தமிழக செய்திதுறை  அமைச்சர் பரிதிஇளம்வழுதி
இன்று (20 -4 -2011 ) பார்வையிட்டு  ஆய்வு செய்தார்.பின்பு அவர் நிருபர்களிடம்
கூறுகையில்   தமிழிசை மூவர்களுக்கு மணிமண்டபம் கட்டுமான பணி முழு வீச்சில் நடந்து வருகிறது .மணிமண்டபம் கட்டும் பணியில்
சுதை வேலைகள் துரிதமாக நடந்து வருகிறது .விரைவில் பணிகள் முடிக்கபட்டு கலைஞர் மணி மண்டபத்தை திறந்து வைப்பார் .
மேலும் மணிமண்டபத்தின் முகப்பில் இருபக்கங்களிலும் பெரிய அளவிலான இரண்டு கல் யானைகளும் அதன் மேல் பண்ணும் ,பரதமும் ,விரலியார்
சிற்பமும் அமைக்கபட்டுள்ளது .மணிமண்டபத்தின் உட்புறத்தில் ரூபாய் 30 இலட்சம் செலவில் தயார் செய்யபட்ட தமிழிசை மூவர்களின்  ஐம்பொன்
சிலைகள் வைக்க பட்டுள்ளது என்றார் .

Sunday, April 10, 2011

திருமுலைப்பால் -சீர்காழி



















சீர்காழி பிரமபுரீசுவர சுவாமி கோவிலில் நேற்று {10 -4 -2011 } நடந்த திருமுலைப்பால் விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.சீர்காழியில் உள்ள புகழ் பெற்ற திருநிலைநாயகி உடனாகிய பிரமபுரீசுவர சுவாமி கோவிலில், பிரம்மன் பூசித்து சிவஞானம் பெற்று சாபங்கள் நீங்கப் பெற்றார். இத்தலம் முருகனின் அம்சமான திருஞானசம்பந்தர் அவதரித்த தலம்.இக்கோவிலின் பிரம்ம தீர்த்தக்கரையில், திருஞானசம்பந்தருக்கு அம்பாள் திருமுலைப்பால் வழங்கிய நிகழ்ச்சி ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு திருமுலைப்பால் வழங்கும் விழா, நேற்று மதியம் நடந்தது.விழாவையொட்டி, திருஞானசம்பந்தர் சன்னதி மண்டபத்தில் எழுந்தருள, அங்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டன. பின்னர் அங்கிருந்து பல்லக்கில் புறப்பட்ட திருஞானசம்பந்தர், பிரம்ம தீர்த்தக்கரையில் எழுந்தருளினார்.